Continue to Netlog

more seconds
rraviravi's profile page

rraviravi

male - 48 years, India
392 visitors

Blog 514


  • படித்ததில் பிடித்தது !



    ஹைக்கூ பேராசிரியர் க.மணிவண்ணன் புதுவை .

    பார்வையில் தெரியாதது
    கேட்கையில் புரியாதது
    புரிந்தது புன்னகையில் !

    பண வீக்கத்தை
    நீக்கும் மருந்து
    உழைப்பு !

    அரிச்சந்திரன் சிலை
    துணைக்கு
    காவல் பணி !

    அறிவு ஆறு அல்ல ஏழு
    என்றது இன்று திரைப்படம்
    அன்றே பத்து என்றார் திருமூலர் !

    புனைகை செலவழிக்க
    அஞ்சும் கஞ்சர்கள்
    இன்றைய மனிதர்கள் !

    அனுபவம் பேசுகிறது
    நினைவு இனிக்கிறது
    ஹைக்கூ !

    --
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • மலர்க்கண்காட்சி !

    மலர்க்கண்காட்சி ! கவிஞர் இரா .இரவி

    மலர்ந்த மலர்கள்
    மலர்வித்தன மனங்களை
    மலர்க்கண்காட்சி !

    பேசாத மலர்கள்
    பேசின நம்மோடு
    மலர்க்கண்காட்சி !

    மலர்களின் மாட்சி
    பார்த்தவர்கள் சாட்சி
    மலர்க்கண்காட்சி !

    மலைகளின் ராணிக்கு
    மலர்களின் மகுடம்
    மலர்க்கண்காட்சி !

    வளமான வனப்பு
    வந்தப்பின்னும் நினைப்பு
    மலர்க்கண்காட்சி !

    ரசித்துப் பார்த்ததில்
    புசிக்க மறந்தனர்
    மலர்க்கண்காட்சி !

    யாராலும் கூற இயலாது
    மிகச் சிறந்த மலர் எது ?
    மலர்க்கண்காட்சி !

    பார்த்த இடமெல்லாம் ராஜா
    மலர்களின் ராஜா ரோஜா
    மலர்க்கண்காட்சி !

    பூக்களை ரசிக்கும்
    பூவையரும் அழகு
    மலர்க்கண்காட்சி !

    கண்கொள்ளாக் காட்சி
    வண்ணங்களின் ஆட்சி
    மலர்க்கண்காட்சி !

    கண்டு ரசிக்க
    கண்கள் போதவில்லை
    மலர்க்கண்காட்சி !

    மனதிற்கு மகிழ்ச்சி
    உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி
    மலர்க்கண்காட்சி !

    மலருக்கு காயமின்றி
    தேன் எடுத்த வண்டு
    மலர்க்கண்காட்சி !

    மரங்களின் அரசி மடியில்
    மலர்களின் அரசாட்சி
    மலர்க்கண்காட்சி !

    --
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • ஹைக்கூ

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    நல்ல தீனி

    ஊடகங்களுக்கு
    சாமியார்கள் கூத்து !

    மெய்ப்பித்தனர்
    கடவுள் இல்லை
    சாமியார்கள் !

    இலவசம் மாற்றம்
    சொல் மட்டும்
    விலையில்லா !

    விமானிகள் வேலை நிறுத்தம்
    அமைச்சர் பிடிவாதம்
    பயணிகள் துன்பம் !

    எந்த ஊரும்
    ஈடாகவில்லை
    பிறந்த மண்ணிற்கு !

    தேவையற்றதை நீக்கிட
    கிடைத்தது
    சிலை !

  • விழிக்கொடை !

    விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி

    வந்தது பார்வை
    பார்வையற்றவர்களு- ்கு
    விழிக்கொடை !

    இறந்தப் பின்னும்
    இறக்காத விழிகள்
    விழிக்கொடை !

    மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்
    மனிதர்களுக்கு வேண்டும்
    விழிக்கொடை !

    கரு விழிகள்
    அகற்றியது இருள்
    விழிக்கொடை !

    வாழ்கிறான் கொடையில்
    வள்ளல் கர்ணன்
    விழிக்கொடை !

    உயிர்ப் பிரிந்தும்
    உயிர்ப் பெற்றது
    விழிக்கொடை !

    உடல் மாறியும்
    உயிர் உள்ளது
    விழிக்கொடை !

    ஒளி ஏற்றியது
    வழி காட்டியது
    விழிக்கொடை !

    துன்பம் துரத்தி
    இன்பம் ஈந்தது
    விழிக்கொடை !

    குறையை நீக்கி
    நிறைவாக்கியது
    விழிக்கொடை !

    மரிக்கவில்லை மனிதம்
    மனிதரில் புனிதம்
    விழிக்கொடை !

    வைத்தது முற்றுப்புள்ளி
    மூடநம்பிக்கைக்கு
    விழிக்கொடை !

    செத்தப்பின்னும்
    சாகவில்லை
    விழிக்கொடை !

    இறப்பிலும் பிறப்பு
    இறக்கத உறுப்பு
    விழிக்கொடை !

    மரணித்தும் மரணிக்கவில்லை
    முடிவிலும் இனிய தொடக்கம்
    விழிக்கொடை !

  • கவிதைக்கூத்து நூல் ஆ

    கவிதைக்கூத்து

    நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

    விமர்சனம் கவிஞர் இரா .இரவி

    வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

    நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

    தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
    தன்னலம் கருதாத் தந்தையவர்
    மின்னலை முந்தும் வேகமவர்
    முன்னிலை விரும்பா மனிதரவர்
    என் நிலை உயர்த்திய ஏந்தலவர்.

    இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

    உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம் கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர் என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

    கவிதைக்கூத்து !

    அடிமைத்தனத்திற்க-
    முடிவை அது காட்டும்
    அறிவுள்ள மனிதனாக
    அனைவரையும் தீட்டும் .
    பேனா கூர்மையில்
    பிரளயம் பிறப்பெடுக்கும்
    கவிதைக்குப் பின்னாலே
    உலகமே காலெடுக்கும்.
    கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .

    சாதி என்ன நிறம் !
    இரத்தத்தில் மட்டும் எழுதாதே
    வாசிப்பதற்கு யாரும்
    உயிரோடு இருக்க மாட்டார்கள் .

    சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .
    தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார் .இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

    தாழ்மை
    வேண்டுமென்று
    ஜெபம் செய்தேன்
    அடிமையாக்கி விட்டார்கள் .
    இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றா- ் .

    வாதம் செய்வதற்கு
    அஞ்சாதீர்கள்
    வாழ்க்கை
    அங்குதான் இருக்கிறது .
    பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

    என் ஜீவனுக்குள்
    ஜீவன்
    "கவிதை "
    கவிதை எமக்கு உயிர் என்கிறார் .

    அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை எழுதி உள்ளார் .

    பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

    இன்று
    நம்பிக்கையோடு வா
    ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
    காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
    ஆசாரிக் கூலி அனைத்திலும் கமிசன் .

    செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .

    எய்ட்ஸ்
    உணர்ச்சியைப் பங்கிடு
    ஒன்றும் தவறில்லை
    உன்னவளோடு மட்டும் .

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .

    மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
    கைரேகை !
    கைக்குள் இருக்கும்
    கைரேகையில் இல்லை வாழ்க்கை
    உழைப்பே உயர்வுக்கு முகவரி
    குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
    சனி என்று சளைத்துக் கொல்லாதே
    செவ்வாய் தோசத்தில்சிக்கிக- கொண்டதாக
    சிறுமைப் படதே
    உன் கையே உனக்கு எதிரியாகுமா !

    சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
    இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .

  • மழை !


    மழை ! கவிஞர் இரா .இரவி

    வானில் இருந்து வரும்
    அமுதம்
    மழை !

    பார்க்கப் பரவசம்
    நனைந்தால் குதூகலம்
    மழை !

    பயிர்களின் உயிர் வளர்க்கும்
    விவசாயிக்கு வளம் சேர்க்கும்
    மழை !

    குடை வேண்டாம்
    தடை வேண்டாம்
    மழை !

    காதலி அருகில் இருந்தால்
    காதல் மழை
    மழை !

    சூடான தேநீர்
    சுவை மிகுதி
    மழை !

    கோடையில் வந்தால்
    கொண்டாட்டம்
    மழை !

    சாலை வியாபாரிகளுக்கு
    திண்டாட்டம்
    மழை !

    குடிசைவாசிகளுக்க-
    ஒழுகும் கவலை
    மழை !

  • அம்மா !

    ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி

    எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும்
    ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !

    இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம்
    என்றும் குழந்தைக்கு மறக்காத முகம் அம்மா !

    உயிரெழுத்தில் தொடங்கி மெய்யெழுத்தில்மை- மாகி
    உயிர்மெய்யில் முடியும் உன்னதம் அம்மா !

    குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த
    குவலயத்தில் சிறந்த உறவு அம்மா !

    கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய
    கருணைக் கடல் ஒப்பற்ற அம்மா !

    தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே
    தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள் அம்மா !

    தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு
    தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா !

    குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து
    தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா !

    குருதியைப் பாலாக்கி வழங்கி பெற்றக்
    குழந்தையின் உயிர் வளர்த்தவள் அம்மா !

    தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால்
    தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் அம்மா !

    தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை
    தரணியில் மணக்க வைக்கும் சந்தனம் அம்மா !

    தன்னை உருக்கி தன் குழந்தையின் வாழ்வை
    தரணியில் ஒளிர வைக்கும் மெழுகு அம்மா !

    தான் சுமந்து தன் குழந்தையை வாழ்வில்
    தவிக்காமல் கரை சேர்த்தத் தோணி அம்மா !

    தான் உயராவிட்டாலும் தன் குழந்தையை
    தரணியில் உயர வைக்கும் ஏணி அம்மா !

    உலகில் யாரை மறந்தாலும் நீங்கள்
    ஒருபோதும் ஒப்பற்ற அம்மாவை மறக்காதீர்கள் !

  • கவிதைகள்

    உலகப் புகழ் இணையத்தில் www.lankasri.com கவிஞர் இரா .இரவி படித்து மகிழுங்கள்

    http://www.lankasripoems.com/index.php?conp=li...

    --
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  • தமிழா நீ பேசுவது தமிழா

    தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி

    தமிழா நீ பேசுவது தமிழா !
    தமிழா இப்படிப் பேசுவது தகுமா ?

    காலைப் பொழுதை மார்னிங் என்றாய்
    மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் என்றாய்

    மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய்
    நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய்

    பாட்டை சாங் என்றாய்
    வீட்டை ஹவுஸ் என்றாய்

    படுக்கை அறையை பெட்ரூம் என்றாய்
    கழிவறையை டாய்லெட் என்றாய்

    தமிழை டமில் என்றாய்
    தண்ணீரை வாட்டர் என்றாய்

    சோற்றை ரைஸ் என்றாய்
    உப்பை சால்ட் என்றாய்

    கடற்கரையை பீச் என்றாய்
    காதலியை லவ்வர் என்றாய்

    கண்களை அய்ஸ் என்றாய்
    கடிதத்தை லெட்டர் என்றாய்

    பள்ளியை ஸ்கூல் என்றாய்
    கல்லூரியை காலேஜ் என்றாய்

    மாணவனை ஸ்டுடென்ட் என்றாய்
    ஆசிரியரை டீச்சர் என்றாய்

    வானொலியை ரேடியோ என்றாய்
    விமானத்தை பிளைன் என்றாய்

    தொலைக்காட்சியை டிவி என்றாய்
    தொலைபேசியை போன் என்றாய்

    பணத்தை மணி என்றாய்
    குணத்தை கேரக்டர் என்றாய்

    வஞ்சியை கேர்ள் என்றாய்
    விபத்தை ஆக்ஸிடென்ட் என்றாய்

    இப்படிப் பேசியே தமிழைக் கொல்கிறாய்
    எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு !

    தமிழா உன்னிடம் ஒரு கேள்வி சிந்தித்துப் பார்
    ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ?

    ஈழத் தமிழர்களின் உச்சரிப்பைப் பார்
    சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர்

    தமிழைச் சிதைப்பது தமிழனுக்கு அழகா ?
    தமிழா !சிந்தித்து தமிழிலேயேப் பேசு !

  • ஹைக்கூ கவிஞர

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மின் விளக்கின்
    வெளிச்சத்தில்
    எடிசன் முகம் !

    இறந்தபின்னும்
    ஒலி எழுப்பும் விலங்கு
    மத்தளம் !

    திட்டங்கள் கோடிகளில்
    ஏழைகள் தெருக் கோடியில்
    என்று விடியல் ?

    பாலியல் குற்றவாளி
    கொலைக் குற்றவாளி
    சாமியார்கள் ?

    தாமதமான நீதி அநீதி
    தண்டியுங்கள் விரைவில்
    இலங்கைக் கொடூரன் !

    சரியாக ஆடும்
    ஆட்டத்தின் பெயரோ
    தப்பாட்டம் !

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இசை !

    மனதை மலர்விக்கும்
    சிந்தையைச் செதுக்கும்
    கவிதை !

    --

    --
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

1 2 3 4 5 ...